Tamil Leaflet: Family is Still Family

Tamil: குடும்பம் என்றால் இப்போதும் குடும்பம்தான். . . . அன்பு என்றால் இதுவும் அன்புதான். . . .

Tamil Leaflet: Family is Still Familyகுடும்பம் என்றால் இப்போதும் குடும்பம்தான். . . . அன்பு என்றால் இதுவும் அன்புதான். . . .

பல பெற்றோர்களுக்கும் குடும்பங்களுக்கும் பெண்-பெண் பாலுறவாளர், ஆண் ஓரினச் சேர்க்கையாளர், இருபாலுறவாளர்கள் அல்லது திருநங்கை (LGBT) என்ற அன்புக்குரியவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு அன்புக்குரியவர் ‘வெளிவரும்போது’ குடும்ப உறுப்பினர்களிடம் கேள்விகள் எழுவது இயல்பே.  உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக நீங்கள் அறிய வேண்டிய சில முக்கியமான உண்மைகள் இதோ:

  • யாரை காதலிப்பது அல்லது எப்படிக் காதலிப்பது என்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

LGBT-யாக அடையாளம் காண்பது விருப்பத்துக்குரியதோ அல்லது தற்செயலானதோ அல்ல.  அமெரிக்காவிற்கு வருவதாலோ, பெரிய நகரங்களில் வாழ்வதாலோ அல்லது LGBT நண்பர்களைக் கொண்டிருப்பதாலோ இது வருவதில்லை. உண்மையில், அமெரிக்காவில் வாழும் 325,000 அல்லது 2.8% ஆசிய / தெற்காசிய மக்கள் LGBT-யாக அடையாளப்படுத்திக் கொள்வதாக UCLA சட்டப் பள்ளியில் உள்ள வில்லியம்ஸ் இன்ஸ்டிடியூட் கூறுகிறது. பாலியல் சார்பு மற்றும் பாலின அடையாளம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதை துல்லியமாக யாருக்கும் தெரியாத நிலையில், பெரும்பான்மையான LGBT மக்கள் தங்களுடைய இளம் வயதிலேயே தங்கள் வேறுபாட்டைப் பற்றி அறிய வருகின்றனர்.

  • பெற்றோர்களும் அவர்களுடைய LGBT குழந்தையும் எந்தத் தவறும் செய்ததில்லை.

LGBT-களின் பெற்றோர்களுக்கு குற்ற உணர்வும் அவமானமும் பொதுவான தொடக்க உணர்வுகளாக உள்ளன. ஆனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை LGBT-யாக்குவதற்குக் காரணமாக இருப்பதில்லை. ஒருவர் LGBT-யாக ஆக்கும் தெரிந்த சூழல் காரணிகள் ஏதும் இல்லை. LGBT-யாக இருப்பது என்பது குழுந்தை அதுவாகவே இருப்பதாகும்.  குடும்பத்தின் ஏற்பு உடல் ஆரோக்கியத்தையும் நலவாழ்வையும் மேம்படுத்துவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.  குடும்பத்தின் அன்பும் ஆதரவும் ஆபத்தான, போதைப் பழக்கம், சுகாதார அபாயக் காரணிகள், மற்றும் தற்கொலை போன்ற தன்னையே அழித்துக்கொள்ளும் நடத்தைகளைக் குறைக்கிறது.

  • LGBT மக்களுக்கு மகிழ்ச்சிகரமான வெற்றிகரமான வாழ்வு உள்ளது

பல LGBT மக்கள் நிறைவான மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். அமெரிக்காவும் உலகமும் விரைவாக மாறிக் கொண்டிருக்கின்றன.  பல மாகாணங்களும் நாடுகளும் தன்-பால் திருமணங்களை அங்கீகரிக்கின்றன. தன்-பால் உறவு கொள்ளும் 33,000 AAPI-களில் 26% பேர் குழந்தைகளை வளர்த்துவருவதாக வில்லியம் இன்ஸ்டிடியூட் கண்டிருக்கிறது.  மேலும், LGBT தனி நபர்கள் வேலையிலும் வெற்றிகரமாக இருக்கின்றனர்.  பல தொழில் நிறுவனங்களும், நிறுவனங்களும், முகமைகளும், லாப நோக்கமற்றவர்களும் தங்களுடைய LGBT தொழிலாளர்களை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர்.

  • அதிகமான விசுவாச மரபுகள் மாற்றமடைந்துவருகின்றனர். LGBT மக்களை அதிகமாக வரவேற்கின்றனர்.

பல விசுவாச மரபுகளும் மதங்களும் LGBT மக்களை வரவேற்கும் அளவுக்கு மாறிவருகின்றனர்.  சில புனித நூல்ககளில் உள்ள பத்திகள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் சிந்தனைகளையும் கலாச்சாரத்தையும் விவரிப்பதற்காக எழுதப்பட்டவை.  LGBT மக்களை ஏற்பது என்பது பரிவிரக்கம், அன்பு, ஒரு இரக்கமிக்க கடவுள் போன்ற பலமான சமயம் சார்ந்த ஆன்மீக மதிப்பீடுகளை வலியுறுத்துவதாகும். ஒருவர் தான் எப்படி நடத்தப்பட விரும்புகிறார்களோ அப்படி மற்றவர்களை நடத்தும் நம்பிக்கையாகவும் உள்ளது என்று பல விசுவாசங்கள் இப்போது ஏற்றுக் கொள்கின்றனர்.  சில மரபுகளில் LGBT அடையாளங்களையும், கடவுள்(கள்) பற்றிய பல கண்ணோட்டங்களையும், பெண் கடவுள்(கள்)-ஐயும் மற்றும் புனித ஆவிகளையும் புனித நூல்களில் சேர்த்திருக்கும் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளன.

  • அனைவருக்கும் ஒரு சிறந்த இடமாக உலகை ஆக்குவோம்

பல மாகாண மற்றும் பெருநகர உரிமையியல் சட்டங்கள் LGBT மக்களைப் பாதுகாக்கின்றன.  இருப்பினும், வேறுபட்டிருப்பவர்களை பாகுபடுத்துவதற்கான வாய்ப்பும் தொடர்கின்றன. இனம், இனக்குழுமம், சமயம், பிறந்த இடம், குடியேற்ற நிலை, பாலின அடையாளம், பாலியல் நாட்டம் எதுவாக இருந்தாலும் நியாயம், பாதுகாப்பு மற்றும் ஒருவர் மற்றவர் மேல் மரியாதை நிறைந்த ஒரு உலகை  உருவாக்குவது நம்முடைய பொறுப்பாகும்.

  • உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கல்வியளிக்கவும்

ஆதரவும் ஆதாரங்களும் தயாராக உள்ளன. PFLAG (தங்களுடைய LGBT அன்புக்குரியவர்களை ஆதரிக்கும் பெற்றோர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு), நேஷனல் குயீர் ஏசியன் பசிபிக் ஐலேண்டர் அலையன்ஸ்  (NQAPIA) மற்றும் ஏசியன் பிரைடு திட்டம் போன்ற குழுக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் ஆதாரங்களாகும்.  அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய வலைதளங்கள்: www.pflag.org, www.nqapia.org, www.asianprideproject.org.

நீங்கள் தனிமையாக இல்லை.

Download the Family is Family – Tamil PDF.

Watch the PSA video in English.